“மாவட்ட ஆட்சியர் உண்ணாவிரதம்” “விவசாயிகளுக்காக போராட்டம்” நெகிழ்ச்சி அடைய செய்த கலெக்ட்டர்..!!

கருப்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகை வழங்காவிட்டால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Image result for சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகைதிருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமை தாங்கினார்.இக்கூட்டத்திற்கு அம்மாவட்ட கரும்பு விவசாயிகள் தங்களுக்கு தனியார் கரும்பு ஆலை கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட்னர்.அப்போது மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில் தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகைகளை வருகின்ற அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் பாக்கி இல்லாமல் முழுவதையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.அப்படி தனியார் நிறுவனம் விவசாயிகளிடமும் ஒப்படைக்காவிட்டால் அக்டோபர் 26ஆம் தேதி  ஆலை முன்பாக  உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

Image result for மாவட்ட ஆட்சியர் கந்தசாமிஅப்போது மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் தான் உங்களுடன் பங்கேற்க போகும் உண்ணாவிரத போராட்ட பேனரை பாருங்கள் என்று உண்ணாவிரத போரட்ட அறிவிப்பு, இடம் , கோரிக்கைகள் உள்ளிடவை இருந்ததை பார்த்து அங்கே இருந்த விவசாயிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் வியப்படைந்தனர்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment