ரஜினிகாந்தின் 168 வது படத்தை இயக்குகிறார் சிறுத்தை சிவா! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் 168 வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்று    அதிகாரப்பூர்வமாக 

By venu | Published: Oct 11, 2019 11:08 AM

நடிகர் ரஜினிகாந்தின் 168 வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்று    அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து, சூர்யா நடிக்கும் படத்தை எடுக்க உள்ள என்ற தகவல் வெளியானது. சூர்யா சூரரை போற்று படத்தில் நடித்து முடித்து விட்டு, இப்படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்குள் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை கூற அந்த கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடித்து போக தர்பார் படத்தை அடுத்து அந்த படத்தை தொடங்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 168 வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்று  பட நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc