இந்த காரணத்திற்க்காக தான் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுகிறேன்! - பிரபல தமிழ் இயக்குனர் விளக்கம்!

இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைதள பக்கங்களான டிவிட்டர், பேஸ்புக்,

By manikandan | Published: Dec 07, 2019 05:22 PM

  • இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைதள பக்கங்களான டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து வெளியேறினார். 
  • பட வேலைகளில் பிஸியானதால் சமூக வலைத்தளங்களை விட்டு விலகுவதாக தகவல்
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ஜீவா, பாண்டிய நாடு, கென்னடி கிளப் என பல நல்ல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஏஞ்சலினா, சாம்பியன் ஆகிய படங்கள் ரிலீசிற்கு ரெடியாக இருக்கிறது. இதில் சாம்பியன் அடுத்த வாரம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், திரைப்பட பணிகள் அடுத்து தொடர்ந்து இருப்பதால் நான் சமூக வலைத்தளமான டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் இருந்து விலகி கொள்கிறேன் இனி அந்த அக்கவுண்ட்களை யாரும் பின்பற்ற வேண்டாம் என தெரிவித்துள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc