தளபதி 65 படம் குறித்து இயக்குநர் பேரரசு விட்ட அறிவிப்பு !

விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து முடித்தற்கும் நிலையில் இந்த படம் தீபாவளி விருந்ததாக விரைவில் திரைக்கு  வர இருக்கிறது.இதனை ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜயின் அடுத்த படம் பற்றிய தகவல்களும் தற்போது வெளியாகிவருகிறது.இந்நிலையில் விஜய் அடுத்ததாக தளபதி 64 படத்தில் கைதி படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைய இருக்கிறார்.

இதையடுத்து தற்போது “தளபதி 65” படத்தை இயக்குநர் பேரரசு இயக்கக போவதாக பல் தகவல்களும் பரவிய நிலையில் இந்த படம் குறித்து பேரரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் நான் தளபதி விஜயின் 65 வது படத்தை இயக்கி போகிறேன் என்ற செய்தியை படித்தேன்.இந்த செய்தி வெறும் செய்தியாகவே பொய் விடும் என்றும் நினைத்தேன்.ஆனால் தற்போது உறுதியான தகவலாக வந்து கொண்டிருக்கிறது. நானும் விஜய்க்காக ஒரு கதை எழுதி வைத்துள்ளேன். நானும் என் கதையும் விஜய்க்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.