தினகரனை கடுப்பேத்திய நிருபர்கள்!ஆக்ரோஷமாக சீரிய தினகரன் ....

ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினரான டிடிவி.தினகரன் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு

By venu | Published: Jan 30, 2018 09:25 PM

ஆர்.கே.நகர் சட்ட மன்ற உறுப்பினரான டிடிவி.தினகரன் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் கோவமாக பதில் கூறியுள்ளார். Image result for dinakaran in bangalore prison sasikala ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் பெங்களூரூ பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், சசிகலாவைச் சந்திக்கும் நேரத்தின் அளவு குறித்து கேள்வி எழுப்பிய ஆங்கிலத் தொலைக் காட்சி செய்தியாளர், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் உள்ளே இருப்பதாக கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்ட அறிக்கையில் உள்ள நேரத்திற்கும், உண்மையில் சசிகலாவைச் சந்திக்கும் நேரத்திற்கும் அதிக வேறுபாடு இருப்பதாக செய்தியாளர் தெரிவித்தார். கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் உண்மையை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகக் கூறி, அதே கேள்வியைத் திரும்பத் திரும்ப அந்தச் செய்தியாளர் கேட்டதால் தினகரன் ஆத்திரமடைந்தார். எப்போது வந்தாலும் 40 நிமிடங்களுக்கு மேல் சசிகலாவைச் சந்திக்க தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று தினகரன் ஆவேசத்துடன் பதிலளித்தார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
Step2: Place in ads Display sections

unicc