சந்தானத்தின் 'டிக்கிலோனா' படத்தில் இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா…!

ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கத்தில் ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் 2020ல் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று(அக்.14) மாலை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கவிருக்கிறார் என்று படக்குழுவினர் அறிவினத்தனர். அதுமட்டுமின்றி, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்ற தகவலையும் வெளியிட்டனர்.

author avatar
Vidhusan