மார்ச் 10- 17 வரை நீங்கள் இந்த இடத்திற்கு சென்றவரா? அப்ப உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

By leena | Published: Apr 01, 2020 03:44 PM

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து, இந்திய அரசு 21வரும்  நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மார்ச் 10 முதல் 17 வரை சென்னை, வேளச்சேரி பகுதியில் அமைந்துள்ள, ஃபீனிக்ஸ் மாலில் உள்ள, தோல் பொருட்கள் விற்பனை  இடத்திற்கு சென்றவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து கொள்ளுமாறும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஏனென்றால், தோல் பொருட்கள் விற்பனை செய்யும் மாலில் பணிபுரிந்த இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளனர். 

Step2: Place in ads Display sections

unicc