தமிழக அரசாங்கம் இதை உணர்ந்ததா? என்று தெரியவில்லை – மு.க.ஸ்டாலின்

கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை விட, ராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் மிக மிக அதிகம்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ்சால்  நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில், இந்த கொரோனா வைரசால், 17,609 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 167 பேர் உயிரிழந்துள்ளனர். 

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், உத்திர பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் போன்ற பெரிய மாநிலங்களை விட, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை அரசு உணர்ந்ததா? என்று தெரியவில்லை.

கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களை விட, ராயபுரம் என்ற ஒரு மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் மிக மிக அதிகம் என்பதையும் தமிழக அரசாங்கம் உணர்ந்ததா? என்று தெரியவில்லை.’ என தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.