அமரப்பள்ளி நிறுவனம் மீது தோனி தொடர்ந்த வழக்கு : அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவு

அமரப்பள்ளி நிறுவனம் மீது தோனி தொடர்ந்த வழக்கு : அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவு

தோனியுடனான அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று  உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது ஐபிஎல் 2019 தொடரில் சென்னை சூப்பர் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின் விளம்பர படங்களில் நடிப்பது குறைந்துவிட்டது.ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரப்பள்ளியின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்த தோனிக்கு ஒப்பந்தம் செய்தபடி அவருக்கு வழங்க வேண்டிய தொகை வழங்கப்படவில்லை.சுமார் 6 முதல் 7 வருடங்கள் தோனி இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறினார்.பின் தோனி அந்நிறுவனம் மீது வழங்க வேண்டிய தொகை வழங்கப்படவில்லை என்று  வழக்கு தொடர்ந்தார்.அதில் அந்த நிறுவனத்தில் சொத்துக்களை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Image result for MSDhoni Amrapali

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். ராஞ்சியில் வீடு வேண்டும் என்று அமரப்பள்ளி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.ஆனால் விளம்பரத் தூதருக்கான பணத்தை தராமல் வீட்டையும்  தராமல் என்னை ஏமாற்றியுள்ளது.எனவே வீட்டை மீட்டு தர வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இதை  விசாரித்த உச்ச நீதிமன்றம்  தோனியுடனான அனைத்து பரிவர்த்தனை விவரங்களையும் நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவுபிறப்பித்துள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *