ஜம்முவில் கிரிக்கெட் அகாடமி தொடங்க உள்ள தோனி !

தோனி கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவ பாராசூட் ரெஜிமெண்டில் லெப்டினெண்ட் பதவியில் உள்ளார். தோனி அவ்வப்போது இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தோனி பாரா டி ஏ பாராசூட் ரெஜிமெண்டில் சேர்ந்து  ஜம்மு காஷ்மீரில் கடந்த ஜூலை 31 -ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில் தோனி ஜம்மு காஷ்மீரில் ஒரு கிரிக்கெட்  அகாடமி ஒன்று தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் , அங்கு உள்ள இளைஞர்களை ஊக்குவிக்க அந்த அகாடமியை தொடங்கி  தோனி இலவசமாக பயிற்சி கொடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் , தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சர் அமைச்சகத்துடன் அவர் பேசியதாக கூறப்படுகிறது.

author avatar
murugan