மேட்ச் பிக்சிங் குறித்து மனம் திறக்கிறார் தோனி.. நடந்தது இது தானா?

  • ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் தோனி.
  • மேட்ச் பிக்சிங் என்பது குற்றம் அல்ல ஒரு கொலைக்கு ஒப்பான ஒன்று.
ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் தோனி.
ஐபிஎல் தொடரில் 2013 ம் ஆண்டு நடைபெற்ற மேட்ச் பிக்சிங் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டன
இது உறுதி பெற்ற பிறகு, எந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் பேட்டிகளிலும் மேட்ச் பிக்சிங் குறித்த கேள்விகளுக்கு தொடர்ந்து மவுனம் காத்து வந்தார் தோனி.
இந்நிலையில் ரோர் ஆஃப் லயன்ஸ் எனும் டாக்குமெண்டரி ஒன்றில் பேசிய தோனி கூறியதாவது,
“மேட்ச் பிக்சிங் என்பது குற்றம் அல்ல ஒரு கொலைக்கு ஒப்பான ஒன்று. இந்த குற்றத்திற்கு வீரர்கள் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இந்த குற்றம் நடக்கவே இல்லை என நான் கூறவில்லை. ஆனால், அணி உரிமையாளர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்க்காக, வீரர்களை தொடர்ந்து விமர்சிப்பது சரியல்ல. மேலும், என்னையும் உரிமையாளர்களுடன் இணைத்து வைத்து பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினர். இதை நான் செய்திருந்தால் என் கிரிக்கெட் வாழ்க்கையை அது எவ்வாறு மாற்றி இருக்கும் என்பது என்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு நன்றாகவே தெரியும். இதைப்பற்றி அதிகம் நான் பேச விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்
author avatar
Vignesh

Leave a Comment