உலகசாதனை படைக்கவில்லை என்றாலும் தோனி சாதனையை சமன் செய்தார் -ரோஹித்..!

இந்தியா ,தென்னாபிரிக்கா இடையே மூன்றாவது மற்றும் கடைசி டி 20 போட்டி நேற்று  நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களமிறங்கி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தனர்.

பின்னர் 135 ரன்கள் இலக்குடன் தென்னாபிரிக்கா அணி களமிறங்கியது.இப்போட்டியில் கேப்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால் தென்னாபிரிக்கா 16.5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.

இப்போட்டியில் ரோகித்சர்மா 9 ரன்னுடன் வெளியேறினார். இந்நிலையில் ரோஹித் சர்மா நேற்றைய போட்டி மூலம் டி20 போட்டிகளில் 98 போட்டியில் விளையாடி உள்ளார்.இதற்கு முன் இந்திய அணியில் அதிகபட்சமாக முன்னாள் கேப்டன் தோனி 98 போட்டியில் விளையாடி இருந்தார்.

தற்போது அவரின் சாதனையை ரோஹித்  சமன் செய்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா 78 போட்டியிலும் , விராட் கோலி 72 போட்டியிலும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

author avatar
murugan