லடாக்கில் தேசிய கொடியை ஏற்ற உள்ள தோனி !

தோனி கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவ பாராசூட் ரெஜிமெண்டில் லெப்டினெண்ட்

By murugan | Published: Aug 10, 2019 08:45 AM

தோனி கடந்த 2011-ம் ஆண்டு முதல் இந்திய ராணுவ பாராசூட் ரெஜிமெண்டில் லெப்டினெண்ட் பதவியில் உள்ளார். தோனி அவ்வப்போது இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தோனி பாரா டி ஏ பாராசூட் ரெஜிமெண்டில் சேர்ந்து கடந்த ஜூலை 31 -ம்  தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை பயிற்சி பெற்று வருகிறார். சில தினங்களுக்கு ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பிரிவு 370 பிரிவின் படி கொடுக்கப்பட்டு வந்த அந்தஸ்த்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.இதை தொடந்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் ,லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் தனி பிரதேசமாக உருவாக்கப்பட்டு உள்ள லடாககில் தோனி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி தேசிய கொடியை ஏற்றுவர் என தகவல் வெளியாகி உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc