தோனி எங்களுக்கு தாரகமந்திரம்…தலைவர் என்றால் அவர் மட்டுமே-நொறுக்கி எடுத்த ஆல்பி

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கெல் தோனியை புகழ்ந்து பாராட்டி உள்ளார். 

ஆல்பி மோர்கெல் தேவைப்படும் போது அணிக்கு தேவையான விக்கெட்டுகளையும் ரன்களையும் எடுத்து கொடுக்கும் ஒரு துல்லிய ஆல்ரவுண்டர்.இதற்கு சான்று ஒருமுறை தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி ‘ஆல்பி எங்கே?’ என்று செய்தியாளர்களிடம் கேட்டார்.

அத்தகைய திறமை மிக்கவர் ஆல்பி,அவரிடம் தன் சிஎஸ்கே அனுபவம், மற்றும் தோனியுடனான பழக்கம் பற்றி கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த ஆல்பி மோர்கல் “தோனி அணியில் பெரியளவில் பங்காற்றும் வீரர், இந்தியாவில் தோனி என்றால் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரைப் போன்ற ஒரு தனித்துவமான வீரர் கிடையாது. ஒரு தலைவராக அவர் வீரர்களிடமிருந்து திறமையை எப்படிக் கொண்டு வரவேண்டும் எனன்பதுது அவருக்கு மட்டுமே உரித்தான கலை என்று புகழ்ந்த மோர்கல் சிஎஸ்கேயைப் பொறுத்தவரை முக்கிய வீரர்களை விட்டுவிடாமல் காத்து, ஒரே கேப்டன் என்ற தாரகமந்திரமே சிஎஸ்கேவின் அதித வெற்றிக்குக் காரணம்.

Image result for alb morkel dhoni

 இவ்வாறு இல்லாவிட்டால் 10 தொடர்களில் சிஎஸ்கே 8ல் இறுதிக்குள் நுழைய முடியுமா? எனவே கேப்டன் என்றால் அவர் ஒருவர்தான்.நான் சிஎஸ்கே அணியில் சில பிரமாதமான ஆண்டுகளில் ஆடினேன். தற்போது என் டைம் ஓவர் இதை நான் ஏற்றுக் கொண்டேன். வாழ்வில் அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டி உள்ளது” என்று  தோனி குறித்த தனது அனுபவங்களை ஆல்பி மோர்கெல் பகிர்ந்தார்.

author avatar
kavitha