தாராபுரம் பெரியார் சிலையை அவமதித்தவர் RSS பின்னணி உடையவர் போலீஸ் விசாரணையில் அம்பலம்..!!

தாராபுரம் பெரியார் சிலையை அவமதித்தவர் RSS பின்னணி உடையவர் போலீஸ் விசாரணையில் அம்பலம்..!!

திருப்பூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த தினமான கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அதிகாலை தாராபுரம் நகரின் மையப்பகுதியில் தீவுத் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலையின் தலை மீது செருப்பு வைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டிருந்தது. அந்த வெண்கலச் சிலையை சேதப்படுத்தவும் விஷமிகள் முயன்றிருந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Image result for பெரியார் சிலையை அவமதிப்புஇந்நிலையில் தாராபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர் தாராபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சாதிய அமைப்பு மற்றும் அரசியல் செல்வாக்கு கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் நவீன்குமார் என்றும், உள்நோக்கம் ஏதுமின்றி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இவர் பெரியார் சிலையை தன்னிச்சையாக அவமதித்தார் என்றும் தகவல் வெளியானது.இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி இவ்வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, நவீன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உளவியல் பாதிப்புக்கு உள்ளானவர் என்ற நிலையில் நவீன்குமார் தன்னையறியாமல் குற்றத்தில் ஈடுபட்டார் என வாதிட்டு பிணையில் விடும்படி கோரினர். எனினும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில் பிணை வழங்கப்படவில்லை. அதேசமயம் அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் மனுச் செய்ததை ஏற்று 26ஆம் தேதி மாலை 5 மணி வரை காவல் துறை விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. Related image இந்த நிலையில், மேற்படி நவீன்குமார் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற விபரம் அவரது சமூக வலைதளப் பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது. கடந்த 2017 அக்டோபர் 8ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் முகாமில் அவர்களது சீருடையான வெள்ளை சட்டை, காக்கி கால்சட்டையுடன் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியிலும் பங்கேற்றிருக்கிறார் என அவரது முகநூலில் பதிவு செய்துள்ளார். தாராபுரம் காவல் துறையினர் விசாரணையில் மேற்படி விபரங்கள் தெரியவந்துள்ளன. DINASUVADU 

Latest Posts

மும்பைக்கு புறப்பட்ட சாரா அலி கான்..!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்!
ஈபிள் கோபுரத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், பலத்த பாதுகாப்பு.!
டெல்லி கலவரம்: குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவரான சல்மான் குர்ஷித் பெயர் சேர்ப்பு.!
பிரதமர் மோடி பாராட்டுரை வாசித்திருப்பதில் ஆச்சரியமில்லை - மு.க. ஸ்டாலின்
#Breaking : மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!
நவ.1 முதல் கல்லூரிகள் திறக்கப்படும் - எந்த விடுமுறையும் கிடையாது!
அபுதாபியில் அக்டோபர் 1 புதிய போக்குவரத்து விதிமுறைகள்.!
ரஃபேல் விமானத்தின் முதல் பெண் விமானி சிவாங்கி சிங்..!