சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவும் தனுஷின் ஒர்க்கவுட் வீடியோ.!

தனுஷ் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும்

By ragi | Published: Jun 20, 2020 06:37 PM

தனுஷ் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் "கரணன்" மற்றும் ஜகமே தந்திரம். கர்ணன் படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் தான் கர்ணன் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை தாணு அவர்கள் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு 90% முடிந்ததாக தகவல் வெளியானது.மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் "ஜகமே தந்திரம் ". இப்படம்,எஸ். சஷிகாந்த் தயாரிப்பில் நடிகர் தனுஷ் அவர்கள் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஒரு இந்திய தமிழ் மொழி கேங்க்ஸ்டர் படமாகும் .சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஸ்ரேயோஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.மேலு‌ம் செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை 2 படத்திலும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இவர் ஒர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதனை தனுஷ் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி வீடியோவை வைரலாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc