தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குநரின் தந்தை காலமானார்.!

தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குநரின் தந்தை காலமானார்.!

தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குனரான வேல்ராஜ் அவர்களின் தந்தை வயது மூப்பு காரணமாக காலமானார்.

கடந்த 2014-ல் தனுஷ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் இயக்கியிருந்தார். சுமார் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் அவர்களின் தந்தையான எஸ். ராஜாமணி இன்று மதியம் வயது மூப்பு காரணமாக காலமானதாக கூறப்படுகிறது. 99 வயதான எஸ். ராஜாமணியின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பல பிரபலங்கள் வேல்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  தங்களது இரங்கல்களையும், ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Join our channel google news Youtube