முதல்முறையாக சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் தனுஷின் மெகா ஹிட் திரைப்படம்.!

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் தனுஷ் மற்றும் சிம்பு. தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கார்த்திக் சுப்பராஜின் ‘ஜகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’. தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் செல்வராகவனின் புதுப்பேட்டை 2 படத்திலும் கமிட்டாகியுள்ளார். அது மட்டுமின்றி இந்தி மற்றும் ஹோலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். தற்போது Atrangi Re என்னும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அசுரன். இப்படத்தின் கதை மட்டுமில்லாமல் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்பட்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது,தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தனுஷின் அசுரன் படத்தை முதல்முறையாக சீன மொழியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை தமிழ் திரையுலகில் எந்த நடிகரின் படமும் சீன மொழியில் ரீமேக் செய்யப்படாத நிலையில், தற்போது தனுஷின் அசுரன் படம் அந்த பெருமையை பெற்றுள்ளது.