பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்!

  • பாலிவுட்டில் களமிறங்கும் தனுஷ்.
  • இந்தியில், ஆனந்த் எல் ராய் இயக்கம் அட்ராங்கி ரே படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ், அவரது நடிப்பில் வெளியான அசுரன் திராய்ப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து, பொங்கலை முன்னிட்டு இவரது நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இவர் தற்போது இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர் இந்தியில், ஆனந்த் எல் ராய் இயக்கம் அட்ராங்கி ரே படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து அக்ஷய்குமார், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.