அடுத்த வருடம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு படங்களில் நடித்து வரும் தனுஷ்!

  • தனுஷ் நடிக்கும் அவரது 40வது படத்தை பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்

By Fahad | Published: Apr 02 2020 08:34 AM

  • தனுஷ் நடிக்கும் அவரது 40வது படத்தை பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.
  • இப்பட ஷூட்டிங் முடிந்த பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தின் சூட்டிங்கில் தனுஷ் கலந்து கொள்ள உள்ளார்.
தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் பட்டாஸ். இப்படம் ஜனவரியில் வெளியாக உள்ளது. இப்படத்தை கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தை அடுத்து பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவருகிறார். இப்பட ஷூட்டிங் லண்டனில் நடைபெற்றது. தற்போது சென்னையில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 24 வரை இப்பட ஷூட்டிங் நடைபெறுமாம். அதற்கு அடுத்ததாக தான் மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளாராம். அப்படம் முழுக்க திருநெல்வேலியை மையமாகக் கொண்டு உருவாக உள்ளதாம். அடுத்து ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக அடுத்தடுத்து நடிக்க உள்ளார்.