நான் அசுரன் படத்தில் நடிக்க சிபாரிசு செய்தது தனுஷ் தான் : நடிகை மஞ்சு வாரியார்

நடிகை மஞ்சு வாரியார் பிரபலமான நடிகையாவார். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள திரையுலகின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி, திரைக்கு வந்துள்ள அசுரன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் நடித்த தனது அனுபவம் குறித்து நடிகை மஞ்சு வாரியார் கூறுகையில், ‘இந்த வேடத்தை நான் ஏற்க தனுஷ் தான் காரணம் என்றும், அவர் தான் என்னை இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்தார்.’ ஏறும் கூறியுள்ளார். இப்படத்தில், சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதால், சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.