படிக்க மொபைல் இல்லாமல் அவதிப்பட்ட மாணவிக்கு ஐபோனையே கொடுத்து உதவிய தனுஷ் பட நடிகை.!

நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவிக்கு மொபைல் இல்லாமல் அவதிப்பட்டதால்,

By ragi | Published: Aug 01, 2020 04:17 PM

நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவிக்கு மொபைல் இல்லாமல் அவதிப்பட்டதால், அவருக்கு ஐபோன் வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் டாப்ஸி.

ஊரடங்கால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் பலருக்கு பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகையான டாப்சி, மாணவி ஒருவருக்கு ஐபோன் வாங்கி கொடுத்து உதவியுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அதற்கு மொபைல் கூட வாங்க இயலாமல் கஷ்டப்படும் ஏழை மாணவர்கள் பலர் உள்ளனர்.

அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பை முடித்து விட்டு நீட் தேர்வுக்காக தயாராகி வருகிறார். அவரது கல்வி கட்டணத்தை பெற்றோர்கள் நகை அடமானம் வைத்து தான் கட்டியுள்ளார்களாம். ஆனால் நீட் தேர்வுக்கு தயாராக ஸ்மார்ட்போன் இல்லாமல் அவதிப்பட்டு வந்த மாணவிக்கு நடிகை டாப்சி உதவியுள்ளார். ஆம் ஸ்மார்ட்போன் வாங்க வழி இல்லாமல் இருந்த அந்த மாணவிக்கு ஐபோன் வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து டாப்ஸி கூறுகையில், பெண்கள் அதிகம் படிக்க வேண்டும், அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும். நமக்கு அதிகமான டாக்டர்கள் அவசியம். அதற்காக இது என்னுடைய சிறு முயற்சி என்று கூறியுள்ளார். தற்போது இவரது இந்த செயலுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 
Step2: Place in ads Display sections

unicc