'அசுரன்' வெற்றிக்கு ரசிகர்களின் வியக்கவைக்கும் செயல் !

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “அசுரன்”. இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் இடம்பெற்றுள்ள அனைத்து சண்டை காட்சிகளும் வெறித்தனமாக இருக்கிறது. ஆனால் தற்போது சுபஸ்ரீ மரணத்திற்குப்பின் பேனர்களை வைப்பதை நிறுத்தியதால் ரசிகர்கள் சமூக சேவைகளை செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் தனுஷ் ரசிகர்கள் திருநங்கைகளுக்கு தையல் இயந்திரம் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Dhanush fans

 

author avatar
Vidhusan