அருளை அள்ளித் தரும் அறுபடை ஆறுமுகன்..!தைப்பூச விரதம் இப்படி மேற்கொள்ளுங்கள்..!

முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச  விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம்  வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய  பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம்.

தைப்பூச விழாவை பற்றி  7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே  நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது.நாளை தைப்பூசம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாளில் விரதம் இருந்தால் சந்தோஷத்தில் சகல வளங்களையும் அள்ளி தருவார்  முருகன் என்பதில் சந்தேகமில்லை.யாமிருக்க பயமேன் என்று நம்மை காக்கும் கந்தனை வழிபாட உன்னதமான ஒரு நாள் தைப்பூசம் ஆகும்.அன்றைய தினத்தில் பக்தர்கள் அழகு குத்துவது காவடி எடுப்பது பால்குடம் எடுப்பது என்று முருகனின் அருட்பார்வைக்காக பாதையாத்திரையாக  வந்தும் வழிபடுவார்கள்.

Related image

 

இத்தகைய அற்புதமான தினத்தில் அறுபடையனை நினைத்து விரதம் இருப்பவர்கள் சகல சௌபாக்கியங்களையும் பெறுவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.

முருகப்பெருமானுக்கு உகந்த இந்த விரதத்தினை கடைப்பிடித்தால் நம் வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும் மேலும்  துன்பம் மறைந்து  வாழ்வில் ஆனந்தத்தை அருள்வார்.நம்மை விட்டு கைவிட்டுச்சென்ற பொருள் மீண்டும் நம்மிடம் வந்தடையும். வீரத்தினை மேற்கொள்கின்றவர் எந்த நாளும் இளமையுடன் இருப்பர். மேலும் குழந்தைகளுக்கு கல்வி அபிவிருத்தியாகும்.தொழில் வளர்ச்சி கூடும். தைப்பூசம் அன்று குழந்தைகளுக்கு காதுகுத்துதல், ஏடு தொடங்குதல், சோறு ஊட்டுதல் போன்ற நற்காரியங்களை இன்றைய தினத்தில் செய்வது சிறப்பானது ஆகும்.

Related image

இவ்விரத்தினை தைப்பூசத்தன்று அதிகாலையிலே எழுந்து குளித்துவிட்டு திருநீறு அணிந்து உத்திராட்சம்  தரித்து இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.  பின்னர் தேவாரம், திருவாசகம் ,கந்த சஷ்டி ,கந்த குரு கவசம் போன்ற பாசுரங்களை பயபக்தியுடன் பாட வேண்டும்.

Image result for முருகன் தை பூசம் பெண்கள் விரதம்

அன்று முழுவதும் உணவு உண்ண கூடாது.அதற்கு பதிலாக மூன்று வேளையும் பால் மற்றும் பழம் சாப்பிடலாம். அன்று மாலை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தினை நிறைவு செய்து வரலாம்.அதே நேரத்தில் சிவபூஜையில் பங்கேற்று சிவனை வணங்கி விரதத்தினை நிறைவு செய்லாம்.

 

author avatar
kavitha

Leave a Comment