ஆறுபடையனுக்காக அலை அலையாக அலைமோதும் பக்த கோடிகள்.!களைகட்டும் தை பூசம் இந்நாளில்..!

முருகப்பெருமானை வழிபடக்கூடிய வழிபாட்டில் தைப்பூச  விழாவிற்கு முக்கியப் பங்கு உண்டு. இந்த விழாவானது தை மாதம்  வருகின்ற பூச நட்சத்திரத்தில் கூடிய  பவுர்ணமி திதி கூடி வரும் நாளையே தைப்பூசம் என்று நாம் கொண்டாடு வருகிறோம்.

தைப்பூச விழாவை பற்றி  7 ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரின் தனது தேவாரப்பாடல்கள் மூலமே  நம்மால் அறிய முடிகிறது.இவ்விழாவானது தொன்று தொட்டு நடைபெறுகிறது.

Related image

இந்த நாளில் முருகப்பெருமானை வழிபடும் அதே வேளையில் அவரின் தந்தையான சிவபெருமானுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இதில் சிவபெருமானுக்கு என்று சிறப்பாக விழாவானது சிதம்பரம் திருத்தலத்தில்நடைபெறும்.

Image result for முருகன் தை பூசம்

அக்கோவிலில் வியாக்ரபாத முனிவர், விஷ்ணு, தேவர்கள், பதஞ்சலி, பிரம்மா,முனிவர்களுக்கு ஆகியோருக்கு சிவபெருமான் தனது ஆனந்த தரிசனத்தைக் காட்டி அருள் புரிந்த அற்புதமான தினம் தைப்பூசம் ஆகையால் இந்த தினத்தில்  சிவனுக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது.

மேலும் இந்த தினத்தில் தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரமும் பூசம் என்பதாலும்  தைப்பூசத்தன்று குரு வழிபாடு வாழ்வை சிறப்பிக்கும் மிகுந்த பலனைத் தரும் என்பது ஐதீகம்.

தைப்பூசத்தன்று முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் நடைபெறும் இந்த  அபிஷேகங்களில் 1008 சங்காபிஷேகம் மற்றும் லட்சார்ச்சன அடங்கும் மேலும் முருக பெருமான் வீதி உலா வந்த அருள் புரிவது வழக்கம்.

Related image

மேலும் இன்றைய தினத்தில்  கிராம தெய்வம் மற்றும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள்.மேலும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தை பூச திருவிழாவானது கொடியேற்றத்துடன் நாட்கள் நடைபெறும். 10 நாட்களான தைப்பூசம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.பக்தர்கள்  அழகு குத்தி அரோகரா கோஷத்துடன்  பால்காவடி,பன்னீர் காவடி ,புஜ்ப காவடி போன்ற காவடிகளுடன் முருகனை தரிசிக்க அறுபடை வீடுகளிலும் 3 ஆம் வீடுகளிலும்  பக்தர்கள் பாதயாத்திரையாக படையெடுத்து வருவார்கள்.

இந்நிலையில் நாளை தைப்பூசம் தமிழாகமெங்கும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.சர்வமும் சரவணன் தான் அவரின் அருளை பெறுவோம்.

 

 

author avatar
kavitha

Leave a Comment