மீண்டும் தேவி பட இயக்குனருடன் இணைந்த நடனப்புயல்!!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடனப்புயல் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தேவி.

இப்படம் திகில் கலந்த பேய் படமாகவும் காமெடி கலந்தும் எடுக்கபாபட்டிருந்ததால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து ஏ.எல் விஜய் இயக்கத்தில் லக்ஷ்மி எனும் படத்தில் மீண்டும் பிரபு தேவா நடித்திருந்தார்.

தற்போது அந்த படத்தை அடுத்து, தேவி படத்தின் இரண்டாம் பாக வேலைகளில் இருவரும் தீவிரமாக களமிறங்கி விட்டனர் . இந்நிலையில் இப்படத்தில் டைட்டில் போஸ்டர் நேற்று வெளியிட்டிருந்தது. விரைவில் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment