திடீர் திருப்பம் ! மகாராஷ்டிராவின் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்பு

மகாராஷ்டிராவின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார் தேவேந்திர பட்னாவிஸ்.
மகாராஷ்டிரா அரசியலில் நாளுக்கு நாள் பல்வேறு அரசியல்  மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.அங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.பாஜக 105 இடங்கள்,சிவசேனா 56 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் கூட்டணி ஒப்பந்தத்தின் படி அங்கு 50-50 என்ற கணக்கில் ஆட்சி நடைபெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.அதற்கு பின்பு யார் ஆட்சி அமைப்பது சிக்கல் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் ஆட்சியமைக்க தீவிரம்காட்டி வந்தது.தொடர்ந்து குழப்பமே நீடித்து வந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதற்கு இடையில்  தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சிவசேனா கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது .ஆனால் அந்த பேச்சுவார்த்தையிலும் வெற்றி கிடைக்காத நிலையில் தொடர்ந்து குழப்பமே நிலவி வந்தது.
இந்த நிலையினில் இன்று மகாராஷ்டிராவின் முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் பொறுப்பேற்றுள்ளார்.மேலும்  துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்றுள்ளார். மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பமாக பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.இருவருக்கும் ஆளுநர் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
 
 
 
 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.