ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார் தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஸ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா

By Fahad | Published: Apr 06 2020 06:19 AM

தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஸ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.ஆனால் நீதிமன்றத்தில் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில் தனது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.செய்தியாளர்கள் சந்திப்பில் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,போதிய பெரும்பான்மை இல்லாததால்  முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.மேலும் சுழற்சி முறையில் முதல்வர் என எந்த வாக்குறுதியும் சிவசேனாவிற்கு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார் . இந்த பேட்டியளித்த அளித்த பின்பு தனது ராஜினாமா கடிதத்தை தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஸ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

Related Posts