டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் மாடல் குறித்த தகவல்கள்..!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் மாடல் குறித்த தகவல்கள்..!

 

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் தான் டிவிஎஸ் நிறுவனத்தின் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் பைக் மாடல் அப்பாச்சி ஆர்ஆர்310 என்பதும் இதன் சிறப்பு.

ஆர்ப்பரிக்கும் டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின், நவீன தொழில்நுட்பங்களின் சங்கமமாக விளங்கும் இந்த பைக்கிற்கு முன்பதிவும் அமோகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கூட்டணியில் உருவான மாடல் என்பதை பிரதிபலிக்கும் விதத்தில், இந்த பைக்கை பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்கிற்கு இணையான தோற்றத்திற்கு மாற்றி அழகு பார்த்திருக்கின்றனர்.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் சூப்பர் பைக்கை போன்று வண்ணங்களுடன் மாற்றப்பட்டு இருக்கிறது. சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் பெயிண்ட் செய்யப்பட்டு இருப்பது அச்சு அசலாக பிஎம்டபிள்யூ சூப்பர் பைக் போலவே இருக்கிறது. அதேபோன்று, ஃபேரிங் பேனலில் பிஎம்டபிள்யூ லோகோ பொருத்தப்பட்டு இருப்பதுடன், ஆர்ஆர் என்ற வெள்ளை நிற ஸ்டிக்கர் அதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஃபேரிங் பேனலில் ஏர் வென்ட்டுகள் போன்ற தோற்றத்தை அளிக்கும் கருப்பு வண்ண ஸ்டிக்கர் வேலைப்பாடுடன் காட்சியளிக்கிறது.

 அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்கில் 312.2சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎஸ் பவரையும், 27.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. சாதாரண சாலை மற்றும் ரேஸ் டிராக்குகளில் ஓட்டுவதற்கு ஏற்ப சிறப்பான செயல்திறன் மற்றும் ஏரோடைனமிக்ஸ் தத்துவப்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Details of TVS Apache RR 310 Bike Model ..!

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *