ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் விபரங்களை கட்டாயம் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்! ஈரோடு கலெக்டர் உத்தரவு..!

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் அணைத்து காளைகளில் விபரங்களை இணையத்தில்

By surya | Published: Dec 26, 2019 07:45 AM

  • ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் அணைத்து காளைகளில் விபரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • அப்படி பதிவு செய்யாத காளைகள், போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாது.
ஈரோடு அருகே பவளத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளிக்கூட வளாகத்தில் வருகின்ற ஜனவரி மாதம் 18ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் காளையின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து காளை உரிமையாளர்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் அருகி தங்களது காளைகள் குறித்து தேவைப்படும் விவரங்களை அளித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத காளை போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்க படாது என ஈரோடு மாவட்ட கலெக்டர் சீ.கதிரவன் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc