அமெரிக்காவில் கோட் சூட்டில் கெத்து காட்டும் துணை முதலமைச்சர்..!

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , தேனி மாவட்ட எம்.பி  ரவீந்திரநாத் குமார்

By murugan | Published: Nov 11, 2019 03:55 PM

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , தேனி மாவட்ட எம்.பி  ரவீந்திரநாத் குமார் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்று உள்ளனர். இந்நிலையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் சிகாகோவில் நடைபெற்ற உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு “தங்கத்தமிழ் மகன்” விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் தேனி மாவட்ட எம்.பி ரவீந்திரநாத் குமாரும் கலந்து கொண்டார் எனப்து குறிப்பிடக்கத்தக்கது. இதற்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அமெரிக்கா சென்றிருந்த போது கோட் சூட்டில் அனைத்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தற்போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோட் சூட்டில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூகவலைத் தளங்களில் பரவி வருகிறது.
Step2: Place in ads Display sections

unicc