#BREAKING: பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

#BREAKING: பிப்ரவரி 14-ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்

2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

பிப்ரவரி 1-ஆம் தேதி  மக்களவையில்  2020-2021-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து முடிந்த நிலையில்  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் பிப்ரவரி 4-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில் பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Image

இந்நிலையில் தமிழக நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சட்டப் பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,2020-21 ஆம் ஆண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓபிஎஸ் நிதிநிலை அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube