பொதுத்தேர்வில் வேறு பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பாளராக நியமிக்க கல்வித்துறை உத்தரவு.!

  • மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
  • இந்நிலையில், தேர்வுப்பணியில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கு முன் ஏற்பாடுகள் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அவரவர் பள்ளியிலேயே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், தேர்வுப்பணியில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களையே 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தேர்வுக்கும் வெவ்வேறு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உள்ளது போல் டம்மி ஷீட் முறையையும் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறித்தியுள்ளது. தேர்வில் முறைகேட்டைத் தவிர்ப்பதற்காக டம்மி ஷீட் முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்