#DelhiElectionResults: 70 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக வெற்றி அறிவிப்பு.! கோட்டையை பிடித்தார் கெஜ்ரிவால்.!

  • 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக  வெற்றி பெற்று, பெருமான்மையை நிரூபித்து ஆம் ஆத்மி 3-வது முறையாக கோட்டையை கைப்பற்றியுள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் 22 மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக  வெற்றி பெற்றுள்ளது. பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.

டெல்லி தேர்தல் முடிவுகள்

இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரு இடத்தில கூட காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகள் வெற்றி பெறவில்லை என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், தேர்தலின் முடிவுகளில் பெருமான்மையை நிரூபித்து ஆம் ஆத்மி 3-வது முறையாக கோட்டையை கைப்பற்றியுள்ளது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வெற்றியின் மூலம் ஆம் ஆத்மி கட்சி தலைவர் 3-வது முறையாக முதல்வராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தலைமை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி டெல்லி மக்களுக்கு நன்றி என தெரிவித்தார். மேலும் வருகின்ற 16-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்