ஐயா என் யானையை காணோம்! கண்டுபிடிச்சி தாங்க! உச்சநீதிமன்றத்தை அதிரவைத்த வழக்கு!

  • டெல்லியில் வனவிலங்குக்களை வளர்க்க அனுமதி இல்லை என்பதால்  சதாம் என்பவர் தன் யானையுடன் தப்பி சென்றார். 
  • அவரையும், யானையும் கடந்த செப்டம்பர் மாதம் பிடித்து, யானையை முகாமிலும், சதாமை சிறையிலும் அடைத்தனர். 

தலைநகர் டெல்லியில் வனவிலங்குகளை வீட்டில் வளர்க்க அனுமதி இல்லை. அப்பகுதியில் வனவிலங்குகளை வளர்க்க ஏற்ற சூழ்நிலை டெல்லியில் இல்லை என்பதால் 2016ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள வனவிலங்குகள் உரிமையாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு வந்தன. இதனை தெரிந்த டெல்லி, ஷகர்போர் பகுதியை சேர்ந்த சதாம் எனப்வர் தான் வளர்ந்துவந்த லட்சுமி என்கிற யானையை கூட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனை அறிந்து வனத்துறையினர் தனிப்படை அமைத்து சதாம் மற்றும் லட்சுமி யானையை தேடிவந்தனர்.

இந்த தேடுதல் வேட்டையில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் யமுனை நதிக்கரையில் சதாம் மற்றும் அவரது யானையை மீட்டனர். லட்சுமி யானையை ஹரியானா மாநிலத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்திலும், சதாமை சிறையிலும் அடைத்தனர். சதாம் 68 நாள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு விடுதலை ஆனார்.

அதன் பின்னர் யானையை பிரிந்து இருக்கமுடியாத சதாம், தன் யானையை மீட்டுத்தர கோரி, டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை அளித்து அதிரவைத்துள்ளார். இதனை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, ‘ இந்திய குடியாமைகளை கண்டுபிடிக்கவே ஆட்கொணர்வு மனு, யானையை கண்டுபிடிக்க ஆட்கொணர்வு மனு அளிக்கக்கூடாது.’ என கூறி சதாம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பாப்டே உத்தரவிட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.