டெல்லியில் சட்ட விரோதமாக மது விற்பனை.! ஓட்டல் மேலாளர் கைது.!

டெல்லியில் சட்ட விரோதமாக மது விற்பனை.! ஓட்டல் மேலாளர் கைது.!

  • Delhi |
  • Edited by Mani |
  • 2020-07-26 09:00:11
வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக மது விற்கப்பட்டது தொடர்பாக, டெல்லி தனியார் ஓட்டல் மேலாளர் கைது செய்யப்பட்டார்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்டுப்படடுகள் விதிக்கப்பட்டு, கடுமையாக பின்பற்றப்படுகிறது. இதில் முக்கியமாக, டெல்லி, ஓட்டல், பார்களில் மது வழங்க அனுமதி வழங்கப்படுவதில்லை.

இதனை மீறி, சட்ட விரோதமாக சில ஓட்டல்களில் மதுபானம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பவன் தஹியா தலைமையில் துவாரகாவின் 7வது பிரிவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சோதனை நடத்தபட்டது. அங்கு வாடிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக மது விற்கப்பட்டது கண்டறியப்பட்டு, அந்த ஓட்டலின் மேலாளர் கைது செய்யப்பட்டார். அவர்மீது, சட்ட விரோதமாக மது விற்றல், நோய் தொற்று பரப்புதல், பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

]]>

Latest Posts

#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !
#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களின் தாய் காலமானார்....
துணை முதல்வர் ஓ.பி.எஸ் மருத்துவமனையில் அனுமதி....