கட்டுமானத்தொழிலாளர்களுக்கு ரூ.5,000 அறிவித்த டெல்லி அரசு .!

டெல்லியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது . அதிலும், முறைசாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை  தளர்த்தியது.  இந்நிலையில், டெல்லியில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கட்டுமானத்தொழிலாளர்களின் நல வாரிய உறுப்பினர்கள், டெல்லி தொழிலாளர் துறை மந்திரி கோபால் ராயை இன்று சந்தித்து பேசினர். அதன் பிறகு இந்த  நிதிஉதவியை டெல்லி அரசு அறிவித்துள்ளது. டெல்லியில், பதிவு செய்யப்பட்ட கட்டுமானத்தொழிலாளர்கள் எண்ணிக்கை 46,000 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk