பேரணியால் வந்த விளைவு ..!வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பி சென்ற அரவிந்த் கெஜ்ரிவால்!

பேரணியால் வந்த விளைவு ..!வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் திரும்பி சென்ற அரவிந்த் கெஜ்ரிவால்!

  • டெல்லியில் பிப்ரவரி 8-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
  • பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனுத்தாக்கல் செய்யமுடியாமல் போனது. 
டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல்  பிப்ரவரி 8-ஆம் தேதி  நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .கடந்த  14-ஆம் தேதி  முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.நாளை (ஜனவரி 21)வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஜனவரி 22 -ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலினை மற்றும் ஜனவரி 24 -ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் .எனவே ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதற்கு இடையில் இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பேரணியாக சென்றார்.ஆனால்  வேட்பு மனுத்தாக்கல் செய்பவர்கள் அதற்கான ஆவணங்களுடன் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில்  மதியம் 3 மணிக்குள் ஆஜராக வேண்டும். கெஜ்ரிவால் தலைமையில் இன்று நடந்த பேரணியால் அவரால் உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு செல்ல முடியவில்லை.இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியவில்லை.இதனையடுத்து நாளை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.

Latest Posts

மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் - முதலமைச்சர் பழனிசாமி
இந்திரா காந்தியின் 36-வது நினைவு தினம்.. பிரதமர் மோடி அஞ்சலி.!
இந்தியா ஒற்றுமையின் கோணத்தை எட்டி வருகிறது - பிரதமர் மோடி
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு..!
#MIvsDC: பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லுமா டெல்லி...?
அமேசானில் ஸ்மார்ட் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தடைந்த ரின் சோப்!
விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த சகாயம் ஐஏஎஸ் ?
மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை...!
மச்சோ.... என்னாச்சோ, பாலாவுடன் பாத்ரூமில் ஷிவானி - இணையத்தை கலக்கும் ப்ரோமோ!
துருக்கி நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு! 786 பேர் காயம்!