RCBvsDC: அதே மைதானம்! பெங்களூரு அணி முதலில் பேட்டிங்!

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற  டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும்  20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : விராத் கோஹ்லி (கேப்டன்), பார்த்திவ் படேல், ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனெனிஸ், மோயீன் அலி, அக்ஷ்திப் நாத் , பவன் நேகி, டிம் சௌதி, நவடிப் சைனி, யூசுந்தர சஹால், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

டெல்லி கேபிடல்ஸ் : ஷ்ரியாஸ் ஐயர்(கேப்டன்),ப்ரீத்வி ஷா, ஷிகார் தவான், ரிஷப் பன்ட் (வி), கொலின் இன்கிராம்,அக்சார் படேல்,ராகுல் திரிவேதியா , கிறிஸ் மோரிஸ், சந்தீப் லேமிச்சேன், கிகிஸோ ரபாடா, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Comment