டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் ..! நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் ..! நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

  • டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
  • காங்கிரஸ் கட்சி  தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை  வெளியிட்டுள்ளது.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.குறிப்பாக தேர்தல்நடந்தை  விதிகள் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது .அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டது .பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும்  ஜனவரி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது . ஜனவரி  21-ஆம் தேதி  மனுதாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஜனவரி 22 -ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலினை மற்றும் ஜனவரி 24 -ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால்  ஆம் ஆத்மி,பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி  தேர்தலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியலை  வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், எம்.பி. சசி தரூர்,  உள்ளிட்டோர் இடம் பிடித்து உள்ளனர்.

Join our channel google news Youtube