கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் – வைகோ

கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கீழடி ஆராய்ச்சியின் மூலம் தமிழர்களின் பண்பாடு மற்றும் பெருமையும் உலகளவில் பிரபலமாகி வருகிறது.இதனை தொடந்து அங்கு சுற்றுலாவிற்காக பல தரப்பினரும் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கீழடியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆய்வு செய்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசமாக அறிவிக்க வேண்டும். அகழாய்வு பணிகளை 110 ஏக்கருக்கு விரிவுப்படுத்த வேண்டும் என்று  வைகோ பேட்டி அளித்தார்.