மறு வாக்குப்பதிவு குறித்து இன்று முடிவு.! தேர்தல் ஆணையம் தகவல்.!

  • திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் வாக்குசாவடிகளில் ஏற்பட்ட சம்பவத்தால் இரண்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
  • இதுதொடர்பாக மறுவாக்குப் பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள  156 ஒன்றியங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட தேர்தலின் போது, வாக்குப்பதிவு நிறுத்தப்பட்ட சாவடிகளில் மறுவாக்குப்பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்ய உள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பாப்பரம்பாக்கத்தில் நேற்று பகலில் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் இரண்டு வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதேபோல வேறு சில வாக்கு சாவடிகளிலும் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர்களும் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், மறுவாக்குப் பதிவு குறித்து மாநில தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்