திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட"/> திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட"> திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட"/>

என்பிஆர்-க்கு எதிராக மக்களைத் திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்-திமுக கூட்டத்தில் தீர்மானம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட

By Fahad | Published: Apr 01 2020 03:52 AM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.  திமுக  15-வது  உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதாவது,என்பிஆர்-க்கு (தேசிய மக்கள் தொகை பதிவேடு) எதிராக மக்களைத் திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த பணி நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்  என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்து சிறப்பு வேளாண் மண்டல சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.