விவோ உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைக்க முடிவு.!

விவோ உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைக்க முடிவு.!

  • IPL |
  • Edited by bala |
  • 2020-08-03 13:00:09

கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லைப்பகுதியான லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது, இந்த மோதலின் தொடர்ச்சியாக சீன பொருட்களை தடை செய்ய வேண்டும் என்று குரல்கள் எழும்பின, மேலும் இதன் காரணமாக சீனாவிற்கு சொந்தமான 59 சீன ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

மேலும் சீன நிறுவனங்களை புறக்கணிக்க ஐபிஎல் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் விவோ நிறுவனத்தை பிசிசிஐ நீக்க வேண்டும் என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவந்தனர், மேலும் இதற்கு விளக்கம் அளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் அவர்கள் ஒப்பந்த காலம் முடியும் வரை ஐபிஎல் ஸ்பான்சராக விவோ மட்டுமே நீடிக்கும் என்று கூறியிருந்தார். மேலும் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளோம் என பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் நிர்வாகக் கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகம் சீனாவின் தொலைபேசி நிறுவனமான விவோ உட்பட அனைத்து ஸ்பான்சர்களையும் தக்க வைக்க முடிவு செய்துள்ளது.

மேலும் இந்நிலையில் இது குறித்து ஐபிஎல் நிர்வாகி ஒருவர் பிடிஐ நிறுவனத்திடம் கூறியது அனைத்து ஸ்பான்ஸர்களும் எங்களுடன் இருக்கிறார்கள் என்பதுதான் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

Latest Posts

#BREAKING: டெல்லியை நொறுக்கி தள்ளிய ஐதராபாத்.! 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!
பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஹைதராபாத்.. 220 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கவுள்ளது டெல்லி!
டாஸ் வென்ற டெல்லி.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் ஹைதராபாத்!
HDFC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஓய்வு பெற்றார்.!
தங்க சுரங்கத்தில் தங்க வேட்டை நடத்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள்.!
இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்த மாணவிக்கு 4 லட்சம் அபராதம்..!
"ரிடையர்ட் ஆகாதிங்கனு இளம் வீரர்கள் சொன்னாங்க" யுனிவர்சல் பாஸ் பெருமிதம்!
கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆப்ரிக்கன் துலிப் மலர்கள்.!
மிசோரம்: ஐசவ்ல் மாவட்டத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு!
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து