கடனை அடைத்து கல்லூரியை மீட்போம் -பிரேமலதா விஜயகாந்த்

ரூ.5,52,73,825  கடன் பாக்கிக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள்

By venu | Published: Jun 22, 2019 06:05 AM

ரூ.5,52,73,825  கடன் பாக்கிக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு சொந்தமான சொத்துக்கள் ஏலத்துக்கு விடப்படுவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பொறியியல் கல்லூரியை மேம்படுத்துவதற்காக கடன் பெறப்பட்டது. இந்த பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண்போம் . விஜயகாந்த் சினிமாவில் நடிப்பது இல்லை, திருமண மண்டபமும் இடிக்கப்பட்டதால் போதிய அளவு வருவாய் இல்லை . ஒவ்வொரு கால கட்டத்திலும் கடனை திருப்பி செலுத்தியே வந்தோம், விரைவில் கடனை அடைத்து கல்லூரியை மீட்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Step2: Place in ads Display sections

unicc