உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்வு.! 1100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..தொடர்கிறது சோகம்.!

துருக்கி நாட்டில் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாதிப்பினால்,

By balakaliyamoorthy | Published: Jan 26, 2020 04:24 PM

  • துருக்கி நாட்டில் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாதிப்பினால், 18 பேர் பலியாகியும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், என்று தகவல் தெரிவிக்கப்பட்டது
  • மேலும், நிலடுக்கத்தால் எலாஸிக்கில் 18 பேரும், மலட்யாவில் 4 பேரும் உயிரிழந்தனர். மொத்தம் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்து, காயமடைந்த எண்ணிக்கை 1100-க்கும் மேற்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
துருக்கி நாட்டில் கிழக்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் அங்காராவில் இருந்து 750 கிமீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரை மையமாக் கொண்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. இது கடல் மட்டத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்.! 18 பேர் பலி..500க்கும் மேற்பட்டோர் படுகாயம்.! இந்த நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் மற்றும் மலாத்யா மாகாணங்களில் ஏராளமான வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பின்னர் வீடுகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடினர். நிலநடுக்க பாதிப்பினால், 18 பேர் பலியாகியும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், நிலடுக்கத்தால் எலாஸிக்கில் 18 பேரும், மலட்யாவில் 4 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ளது. 1100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களில் 34 பேர் தீவிர சிகிச்சைப் பிரியில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் துருக்கி நாட்டில் சோகம் தொடர்கிறது.
Step2: Place in ads Display sections

unicc