கேரளாவில் 2 வது உயிரிழப்பு,213 பேருக்கு பாதிப்பு

கேரளாவில் இன்று கொரோனா வைரஸுக்கு  2-வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. உலக முழுவதும்

By venu | Published: Mar 31, 2020 01:29 PM

கேரளாவில் இன்று கொரோனா வைரஸுக்கு  2-வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

உலக முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். சீனாவில் தொடங்கி சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபப்ட்டுள்ளனர் . 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

கொரோனா வைரஸுக்கு கேரள மாநிலத்தில் இன்று 2-வது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அப்துல் அஜிஸ் (வயது 68) என்பவர் அனுமதிக்கப்பட்டு  கொரோனா சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் என்று  மருத்துவக்கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் இதுவரை 213 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc