ஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்தவர், மராத்திய நடிகையான பூஜா ஜூஞ்சார்.

By murugan | Published: Oct 22, 2019 07:36 PM

மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்தவர், மராத்திய நடிகையான பூஜா ஜூஞ்சார். இவர் மராட்டியத்தில் சில படங்கள் நடித்து வந்தார். தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், தனது சொந்த ஊரான ஹிங்கோலியில் இருந்தார். நேற்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது இந்நிலையில் உடனடியாக அவரது உறவினர் கோரேகான் இல் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு பிறந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களே இறந்தது. சற்று நேரம் கழித்து பூஜாவின் உடல் நிலையும் மிகவும் மோசமடைந்தது. அவரை உடனடியாக ஹிங்கோலியில் உள்ள சிவில் ஹெல்த் செண்டர் க்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து அவரும் அவரது உறவினர்களும் அங்கு செல்வதற்கு ஆம்புலன்ஸ் அழகாக காத்திருந்தனர். அங்கும் இங்கும் அலைந்து ஒரு மணி நேரம் வரை ஊற ஆம்புலன்சும் கிடைக்கவில்லை. அதன் பின் வந்த ஆம்புலன்சில் அவசர அவசரமாக பூஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
Step2: Place in ads Display sections

unicc