செவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை.! தாயின் குரல் கேட்டு இணையத்தில் இதயத்தை உருக்கிய காட்சி..!

செவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை.! தாயின் குரல் கேட்டு இணையத்தில் இதயத்தை உருக்கிய காட்சி..!

  • செவித்திறன் இல்லாத பச்சிளம் குழந்தை, முதல் முறையாக தாயின் குரல் கேட்டு முகம் மலர்ந்து சிரித்த காட்சி இணையவாசிகளின் இதயத்தை உருக்கி உள்ளது.
  • ஜியார்ஜினா என்று பெயரிடப்பட்ட, அந்த குழந்தைக்கு செவித்திறன் இல்லை.
  • 7 லட்சம் மேல் அதிகமாக பார்க்கப்பட்டனர்.

இங்கிலாந்தின் யார்க்சையருக்கு அருகே உள்ள ஹரோகேட் நகரைச் சேர்ந்த பால் அடிசன்- மற்றும் மனைவி லூசி அவர்களுக்கு  நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு மகள் பிறந்தாள். ஜியார்ஜினா என்று பெயரிடப்பட்ட, அந்த குழந்தைக்கு செவித்திறன் இல்லை. இதனால் நான்கு மாதங்கள் கடந்த பின்னர் காது கேட்கும் கருவியை குழந்தையின் காதுகளில் பொருத்தினர். முதல் முறையாக அந்த கருவியை இயக்கிய தாய் லூசி மகளை பெயர் சொல்லி அழைத்தார். அப்போது தாயின் குரலை முதல் முறையாக கேட்ட அந்த குழந்தையின் முகத்தில் ஒரு சூரிய பிரகாசம் விரிந்தது.

இதனிடையில் கள்ளமில்லாத அந்த பிஞ்சு முகத்தில் பிரகாசமாய் மின்னி அந்த முதல் ஒலி கேட்ட சிரிப்பை கேமிராவில் பதிவு செய்த குழந்தையின் தந்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தார். பின்பு பார்ப்போரின் உள்ளத்தை நெகிழ செய்யும் இந்த காட்சி இப்போது இணையத்தில் 7 லட்சத்துக்கு அதிகமாக பார்க்கப்பட்டு இணையத்தில் பாராட்டுகளையும் அள்ளி வருகிறது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube