தனது காயமுற்ற தந்தையை 1,200 கி.மீ சைக்கிளில் அழைத்து வந்த மகள்! இவான்கா ட்ரம்ப் பாராட்டு!

தனது காயமுற்ற தந்தையை 1,200 கி.மீ சைக்கிளில் அழைத்து வந்த மகள்! இவான்கா ட்ரம்ப் பாராட்டு!

ஜோதிகுமாரியின் செயல், சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் அழகான சாதனை, இந்திய மக்களின் கற்பனையையும், சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து  வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  வருவதால், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு  நடைப்பயணமாகவும், மிதிவண்டி மூலமாகவும் செல்கின்றனர்.  இந்நிலையில், 15 வயதான சிறுமி ஜோதி குமாரி அரியானாவின் குர்கோவான் நகரிலிருந்து காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 கி.மீ  10 நாட்களில் சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து வந்துள்ளார். இவரது இந்த செயல் பலருக்கு பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், ஊரடங்கிற்கு பின் ஜோதி குமாரியை  பயிற்சிக்கு அழைத்துள்ளது.  இதனையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகளும், ஆலோசகருமான இவான்கா ட்ரம்ப், ஜோதி குமாரியின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இவான்கா ட்ரம்ப் தனது ட்வீட்டர்  பக்கத்தில், '15 வயது சிறுமியான ஜோதி குமாரி, 7 நாட்களில், 1,200 கி.மீ தூரம் தனது காயமடைந்த தந்தையை சைக்கிளின் பின்புறத்தில் வைத்து,  தனது சொந்த கிராமத்திற்கு அழைத்து  சென்றுள்ளார். இவரின் சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் அழகான சாதனை, இந்திய மக்களின் கற்பனையையும், சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது.' என பதிவிட்டுள்ளார்.

 

]]>